சென்னையில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் புள்ளி விவரத்துடன் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சென்னையில் 2021ம் ஆண்டில் 93 கொலைகளும் 2022ம் ஆண்டில் 94 கொலைகளும் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு 97 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 4 ஆதாயக் கொலைகளும், 11 கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. 230 வழிப்பறி, 35 கொடுங்களவு, 503 சாதாரண களவு ஆகியவையும் நடைபெற்றுள்ளன. ரவுடிகள் வேட்டையில் சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி, எண்ணூர் தனசேகரன், ஆற்காடு சுரேஷ், பி.டி.ரமேஷ் உள்ளிட்ட 74 கொடுங் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் முதல் நடத்தப்பட்ட வேட்டையில், 547 சரித்திரப் பதிவேடுகள் புதிதாக துவக்கப்பட்டு, மொத்தம் 3610 சரித்திரப் பதிவேடுகள் தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகின்றன. வீட்டை உடைத்து திருடுபவர்கள் மற்றும் வாகன திருடர்கள் உள்ளிட்ட 5636 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 165 நபர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 633 பேர் இளம்சிறார் குற்றவாளிகள் ஆவர். குண்டர் சட்டத்தில் 2020 (334 நபர்கள்) மற்றும் 2021 (270 நபர்கள்) ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2022ம் ஆண்டு, ரவுடிகள் உட்பட 424 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இது தவிர, 2020 (2945 நபர்கள்) மற்றும் 2021 (4991 நபர்கள்) ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டு 7187 நபர்களுக்கெதிராக பாதுகாப்பு செயல் முறைகளின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *