சூதாட்டம் விளையாடியதாக 25 வழக்குகள் பதிவு- அரியலூர் எஸ்பி கே.பெரோஸ்கான்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குற்றச்சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற 16 கொலை சம்பவங்களில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்ஸோ சட்டத்தில் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 186 பேரும், 10 பாலியல் வழக்குகளில் 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 182 குற்றவழக்குகள் பதிவான நிலையில், 120 வழக்குகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து இழப்பு (பாரி) தொடர்பாக பதிவான 19 வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.55 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட பாலியல் குற்ற வாளிகள் 18 பேர், போதை பொருள் குற்றவாளிகள் 5 பேர், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்திய 10 பேர், சாராயம் காய்ச்சிய 5 பேர் என 43 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மணல் கடத்தல் தொடர்பாக 127 வழக்குகள், லாட்டரி மோசடி தொடர்பாக 19 வழக்குகள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 179 வழக்குகள், சூதாட்டம் விளையாடியதாக 25 வழக்குகள், கஞ்சா விற்பனை செய்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.67,66,010 மதிப்பில் குட்கா, ரூ.5, 25,898 மதிப்பில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *