
சீனாவில் நடைபெற்ற கார் விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
சீனாவில் நடைபெற்ற கார் விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்கள் . ஞாயிற்றுக்கிழமை காலை நான்சாங் கவுண்டியில் இந்த விபத்து நடந்தது. அப்பகுதியில் கடும் மூடுபனி நிலவுவதால், வாகன ஓட்டிகள் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நான்சாங் மாவட்ட போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். சீனாவில் சாலையில் கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாததால் விபத்துக்குகள் ஏற்படுவது சகஜமாகி விட்டது .