
சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு… தனிக்குழு அமைத்து விசாரணை..!!!
டிசம்பர் 28ம் தேதி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியாகினர்.கடந்த ஜனவரி 1ம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பொதுநல நிகழ்ச்சி நடந்தது. இந்த நலத்திட்டத்தில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சங்கராந்தி பண்டிகை தொகுப்பை வழங்கினார். கூட்டத்தை முடித்துக் கொண்டு சந்திரபாபு நாயுடு சென்றதும் திடீரென மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆந்திர எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த ஆந்திர உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சேஷசயன ரெட்டி தலைமையில் குழுவை ஆந்திர அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு, பொறுப்பேற்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடித்து, அதன் அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.