
சட்டவிரேதமாக மது விற்பனை செய்தவர் கைது : 120 பாட்டில்கள் பறிமுதல்
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் தேவிப்பட்டினம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது. அவரை விசாரித்தபோது, ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் இந்திரா காலனியை சேர்ந்த தவம்(வயது 46) என்பதும், மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.