
கோவாவில் பரபரப்பு… விமான ஊழியர்களை தாக்கிய பயணிகள்..!!
கோவாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட மோபா விமான நிலையத்தில், 2 வெளிநாட்டு பயணிகள் மும்பை செல்லும் விமானத்தில் ஏறினர். அங்கிருந்த விமான ஊழியர்களை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 2 வெளிநாட்டு பயணிகளும் மோபா விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.