
கைக்குட்டையால் கழுத்தை நெரித்து பிறந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்..!!
மகாராஷ்டிராவில் 2வது பெண் குழந்தை பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஓஸ்மானாபாத் ஹோலியில் வசிக்கும் 25 வயது பெண், காசர் ஜாவாலா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததையடுத்து மனமுடைந்த அப்பெண், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி கைக்குட்டையால் கழுத்தை நெரித்து கொன்றார்.விசாரணையில் குழந்தையை தாயே கொன்றது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை மாலை அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.