
கூலி தொழிலாளி தற்கொலை
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள தண்டுகாரனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது55). கூலி தொழிலாளியான இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை என்.கொளத்தூர் பகுதியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.