கூடுதலாக 8,189 சிசிடிவி கேமராக்கள் பொருத்த போலீசார் திட்டம்
சென்னையில் விரைவில் 8,189 சிசிடிவி கேமராக்கள் பொருத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். சென்னை மாநகரம் முழுவதும் குற்றங்களை தடுக்க போலீசார் இதுவரை 83,226 சிசிடிவி கேமராக்கள் அமைத்து உள்ளனர். 2,730 இடங்களில் 8,189 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இந்த புதிய சிசிடிவி கேமராக்கள் 6 மாதத்திற்குள் அமைக்கப்பட உள்ளது. இந்த தானியங்கி கேமராக்கள் குற்றவாளிகளின் முகம் அடையாளம் காணும் வசதிகள் கொண்டவை ஆகும். மேலும் இந்த சிசிடிவி கேமராக்கள் போக்குவரத்து ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க உதவும் வசதி கொண்டது ஆகும். போலீசாரின் 3-வது கண்ணாகக் கருதப்படும் சிசிடிவி கேமராக்கள், குற்றங்களை விரைவாகக் கண்டறிய உதவுகின்றன, வழக்குத் தொடர சிறந்த ஆதாரங்களை வழங்க உதவுகின்றன. பெண்கள், குழந்தைகள் பொது இடங்களில் சிறந்த பாதுகாப்புக்கும் பொதுமக்களிடையே சிறந்த பாதுகாப்பு உணர்வை உருவாக்கும் வகையில் திகழ்கின்றன. மேலும் சிசிடிவி கேமராக்கள் குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பெரிதும் உதவி புரிந்து வருகின்றன.