
குவைத் கமர்ஷியல் வங்கி டிராவில் இந்தியருக்கு விழுந்த பெருந்தொகையிலான பரிசு
குவைத்தின் கமர்ஷியல் வங்கி ஏற்பாடு செய்த அல் நஜ்மா கணக்கு டிராவில் இந்தியாவின் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு 15 லட்சம் தினார் (40 கோடி இந்திய ரூபாய்க்கு மேல்) பரிசு வழங்கப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற குலுக்கல் போட்டியில், குவைத்தின் முதல் பத்திரிகையாளரும், இந்தியா இன்டர்நேஷனல் பள்ளியின் இயக்குநருமான கேரளாவின் கோழிக்கோடு அதோலியைச் சேர்ந்த மலைல் மூசகோயாவுக்கு அதிர்ஷ்டப் பரிசு கிடைத்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தில் பணிபுரிந்து வரும் மூசகோயா, இதற்கு முன்பு குவைத் டைம்ஸின் மலையாள மேசையில் பணிபுரிந்தார். தற்போது மங்காப் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியின் இயக்குநராக உள்ளார். குவைத்தில் வெளிநாட்டவர் பெற்ற மிகப்பெரிய பரிசுத் தொகைக்கு முசகோயா தகுதி பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் விவரம் தெரிவித்துள்ளன.