
கள்ளக்குறிச்சி பாஜக கூட்டத்தில் தொண்டர்கள் மோதல்
பாஜக சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தலைவர்களின் தொண்ர்களும் மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் நிலவரம் குறித்து ஆலோசிக்க சங்கராபுரத்தில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் அலுவலகப் பொறுப்பாளர்களின் பெயர்களில் சில மாற்றங்களைச் செய்தார்.
இதையடுத்து கட்சியில் மாவட்ட பலம் வாய்ந்த தலைவர்களான அரூர் ரவி ஆதரவாளர்களுக்கும், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு இறுதியில் மோதலுக்கு வழிவகுத்தது. இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.