
கர்நாடகாவில் ஸ்ரீராம் சேனா தலைவர் துப்பாக்கி சூடு
கர்நாடகாவில் பெலகாவி ஸ்ரீராம் சேனா மாவட்ட தலைவர் ரவி கோகிட்கர் துப்பாக்கியால் சுடப்பட்டார். பைக்கில் வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பலத்த காயத்துடன் கோகிட்கர் பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோகிட்கர் பல ஆண்டுகளாக கர்நாடகாவில் ஸ்ரீராம் சேனாவின் முக்கிய தலைவராக இருந்து வருகிறார். இந்த தாக்குதலுக்கு ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல்களுக்கு இந்துத்துவா ஆர்வலர்கள் பயப்பட மாட்டார்கள் என்று அவர் தெளிவுபடுத்தினார்.