
கடுங்குளிரால் தலைநகரில் மக்கள் அவதி..!!
வட இந்தியா கடுமையான குளிர்காலத்தை அனுபவிக்கிறது. இதனால், காலையில் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். டெல்லியில் நடப்பு குளிர்காலத்தில், நகரின் பல்வேறு பகுதிகள் கடும் பனியால் மூடப்பட்டு உள்ளது. காலையில் மூடுபனி காணப்படுகிறது. வானிலை மேகமூட்டமாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களைப் பார்க்க முடியாது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய வைத்தே செல்கின்றன. டெல்லியில் கடும் குளிரின் காரணமாக பகலில் அடர்த்தியான ஆடைகளை அணிந்து வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் மக்கள் வெளியே செல்வது குறைவு. இருப்பினும், பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர். டெல்லி விமான நிலையத்தில் கடும் பனி மற்றும் மங்கலான பார்வை காரணமாக, விமானங்கள் தாமதமாக வந்து செல்கின்றன. இதன்படி மொத்தம் 20 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாமதமாக வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், காலை 6 மணி வரை எந்த விமானங்களும் திருப்பி விடப்படவில்லை என்று டெல்லி விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.