ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்று புவனேஸ்வரில் நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால் – ஒடிசா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் கிளெய்ட்டன் சில்வா ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதற்கு பதிலடியாக ஒடிசா அணி சார்பில் டியாகோ ஆட்டத்தின் 22 மற்றும் 53-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். மேலும் நந்த குமார் ஆட்டத்தின் 45+2 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் ஒடிசா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *