இந்தியன் சூப்பர் லீக் : ஜாம்ஷெட்பூர் – சென்னையின் எப்.சி ஆட்டம் டிரா

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், ஜாம்ஷெட்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் – சென்னையின் எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ரித்விக் தாஸ் ஆட்டத்தின் 17 மற்றும் 56-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார்.

இதற்கு பதிலடியாக சென்னையின் எப்.சி அணி சார்பில் வின்சி ஆட்டத்தின் 60-வது நிமிடத்திலும் பீட்டர் ஆட்டத்தின் 68-வது நிமிடத்திலும் என தலா ஒரு கோல் அடித்தனர். அதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில்இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *