
அதிர்ஷ்டத்தை கொண்டு வர மீன்களை ஏரியில் வீசிய பெண்ணுக்கு அபராதம் விதிப்பு
அதிர்ஷ்டம் தரும் என்று நம்பி 12.5 டன் கெளுத்தி மீன்களை ஏரியில் வீசிய சீனப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷூ என்ற இளம் பெண் வெளிநாட்டு கெளுத்தி மீன்களை 90,400 யுவான்களுக்கு (ரூ. 10,84,800) வாங்கினார். அது அதிர்ஷ்டத்தைத் தரும் என்ற பௌத்த நம்பிக்கையின் அடிப்படையில், அந்த இளம் பெண் அந்த மீனை சாங்ஷு நகரில் உள்ள ஒரு பெரிய ஏரியில் விடுவித்தார். ஆனால் ஏரியின் சுற்றுச்சூழலுக்கு ஒத்துப்போக முடியாத கெளுத்தி மீன்கள் அனைத்தும் சீக்கிரமாக செத்து மடிந்தன. அந்த இளம்பெண்ணின் செயலுக்கு உள்ளூர் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. பத்து நாட்களுக்குப் பிறகு, இந்த மீன்கள் உள்ளாட்சி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களால் ஏரியில் இருந்து அகற்றப்பட்டன. அவை கிளாரியாஸ் இனத்தைச் சேர்ந்த கெளுத்தி மீன்கள். இவை வேகமாக வளரும். நிகழ்வுகளின் உண்மை விவரம் டிசம்பர் 2021 இல் வெளிவந்தன. அந்த பெண் மீது கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.