அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் : இறுதிப்போட்டியில் ஜோகோவிச்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில்  21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தரநிலையில் 7-வது இடத்தில் உள்ளவருமான டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 30 நிமிடம் நடந்தது. இறுதிப்போட்டியில் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்திக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *