அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் : செபாஸ்டியன் கோர்டா இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா, தரநிலையில் 37-வது இடத்தில் இருக்கும் யோஷிஹிடோ நிஷிகாவை (ஜப்பான்) சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த மோதலில் செபாஸ்டியன் கோர்டா 7-6 (7-5), 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது யோஷிஹிடோ காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செபாஸ்டியன் கோர்டா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *