
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் : இறுதிப்போட்டியில் சபலென்கா
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள இரினா கெமிலியா பெகுவை (ருமேனியா) எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டம் 1 மணி 18 நிமிடம் நடந்த நிலையில், சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் இரினா கெமிலியா பெகுவை தோற்கடித்து டபிள்யூ.டி.ஏ.சர்வதேச போட்டியில் 19-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்