ஜனவரி 07, வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார்.

1558 – கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது.

1566 – ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.

1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார்.

1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *