
குஜராத்தில் உள்ள ஒரு தடுப்பணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் பெயர்
பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் நினைவாக குஜராத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைக்கு ஹீரா பென் பெயர் சூட்டப்பட்டுள்ளது . ராஜ்கோட் நகரில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
தடுப்பணைக்கு ஹீரபா ஸ்மிருதி சரோவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. ராஜ்கோட்-கலாவத் சாலையில் வாகுடாட் என்ற இடத்தில் நயாரி ஆற்றின் பள்ளத்தாக்கில் தடுப்பு அணை கட்டப்பட்டு வருகிறது. பதினைந்து லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருவதாக அறக்கட்டளை தலைவர் திலீப் சகியா தெரிவித்தார்.
விழாவில் எம்எல்ஏ தர்ஷிதா ஷா, ராஜ்கோட் மேயர் பிரதீப் தவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.