எசுப்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் பலி ஜனவரி 07
1972 – எசுப்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் உயிரிழந்தனர்.
1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் நோம் பென் வீழ்ந்தது. போல் போட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.
1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.
1985 – சப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் முதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.
1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
1991 – எயிட்டியின் முன்னாள் தலைவர் ரொஜர் லபோட்டாண்ட் இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வி கண்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.