தேங்காய் வியாபாரத்தில் நஷ்டம்: தம்பியை கொலை செய்த அண்ணன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி, வயது (42).இவரது அண்ணன் மகாலிங்கம். இவர்கள் இரண்டு பேரின் வீடும் அருகருகே உள்ளது. இருவருக்கும் திருமணமாகிய நிலையில், இருவரின் மனைவியும் இவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் இவர்கள் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாலிங்கத்தின் தங்க நகை அடகு வைத்து இருவரும் ஒன்றாய் தேங்காய் வியாபாரம் செய்து வந்தனர். தேங்காய் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தினால் இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக வீட்டில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக நேற்று இரவு இருவருக்கும் வீட்டில் வைத்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த ஆறுச்சாமி கிரிக்கெட் மட்டையால் அண்ணன் மகாலிங்கத்தை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தம்பி ஆறுசாமியை துரத்திச் சென்று வடபுதூர் பஸ் நிறுத்தம் அருகே ஆறுச்சாமி வயிற்றில் வலது பக்கத்தில் கத்தியால் பலமாக குத்தி விட்டு அங்கிருந்து மகாலிங்கம் தலைமறைவானார். இதில் சம்பவ இடத்திலேயே ஆறுச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிணத்துக்கடவு காவல் துறையினர், ஆறுச்சாமியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் வைத்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *