
முதல் 20 ஓவர் போட்டி… இலங்கைக்கு எதிராக 162 ரன்கள் எடுத்த இந்திய அணி…!!!
மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இதன்படி இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார். இந்நிலையில் இந்த போட்டிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்துவீசுவதாக அறிவித்தார்.
இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் டி20 அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர்கள் கிஷன், கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடியாக இன்னிங்ஸை ஆரம்பித்த கசுன் ராஜித முதல் ஓவரிலேயே 17 ஓட்டங்களைப் பெற்றார். இந்நிலையில், ஆட்டத்தின் 3வது ஓவரை வீசிய மகேஷ் டிக்சனா, எல்பிடபிள்யூ முறையில் சுப்மான் கில்லை வீழ்த்தினார். டிஆர்எஸ் முறையில் மேல்முறையீடு செய்தும் பலனில்லை.
இதையடுத்து களம் இறங்கிய துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. சஞ்சு சாம்சன் 3வது விக்கெட்டுக்கு வந்த போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறினார். அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் இஷான் கிஷானுடன் அணி கேப்டன் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்நிலையில், அதிரடியாக ஆடிய இஷான் கிஷான், ஹசரங்கா 37 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின் பாண்டியாவுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த பாண்டியா 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து அக்சர் படேல் களம் இறங்கினார். கடைசி ஓவரில் தீபக் ஹூடா அதிரடி காட்டி சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பாக இஷான் கிஷான் 37 ஓட்டங்களையும், தீபக் ஹூடா 41 ஓட்டங்களையும், அக்சர் பட்டேல் 31 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா, திக்சனா, டி சில்வா, கருணாரத்னே, மதுஷங்க ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாட உள்ளது.