2023ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும்- பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

உலகம் முழுவதும் இன்று 2023-ம் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் 2023-ம் ஆண்டு சிறப்பானதாக அமையட்டும்! இந்தாண்டு நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவரும் அற்புதமான ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *