2022ல் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்

காஷ்மீரில் 2022ல் பாதுகாப்புப் படையினர் நடத்திய 90க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர்களில் 42 பேர் வெளிநாட்டினர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில், 108 லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர், 35 ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தினர், 22 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன், 4 பேர் அல்பத்ர் இயக்கத்தினர் மற்றும் 3 பேர் அன்சார் கஜ்வத்துல் ஹிந்தைச் சேர்ந்தவர்கள்.

தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வது 37 சதவீதம் குறைந்துள்ளதாக ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்தார். அந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நடந்த மோதலில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்த 14 பேர் உட்பட 26 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *