ஹரியானாவில் நிலநடுக்கம்; டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல்

புதுடெல்லி : ஹரியானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் என்ற இடத்தில் பூமிக்கு அடியில் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியின் அருகில் உள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய தலைநகரை உலுக்கிய நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.19 மணியளவில் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *