
மோடிக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
பிரதமர் மோடிக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் பங்களிக்கவில்லை என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
புதிய இந்தியாவின் தந்தை பிரதமர் நரேந்திர மோடி என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ் டிசம்பர் 21 அன்று கூறியிருந்தார். இதனை விமர்சித்த நிதிஷ்குமார் புதிய இந்தியாவின் தந்தை நாட்டுக்காக என்ன செய்தார் என்று கேலி செய்தார்.
இந்தியாவுக்கு இரண்டு தேச தந்தைகள் உள்ளனர். மகாத்மா காந்தி பழைய இந்தியாவின் தந்தை என்றால், மோடி புதிய இந்தியாவின் தந்தை என்பது அவர்களின் அறிக்கை.