
மோகன்லால் நடிக்கும் “எலோன்” படத்தின் டிரெய்லர் வெளியானது
மலையாளத்தில் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில், ராஜேஷ் ஜெயராமன் எழுதி, ஆசிர்வாத் சினிமாஸ் மூலம் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் திரைப்படம் எலோன். 2023 திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மோகன்லால் இந்த படத்தில் காளிதாஸ் என்ற ஒரே கேரக்டரில் நடிக்கிறார், அவருக்கு படத்தில் சில குரல் வேடங்களும் உள்ளன. இந்த படத்தின் பின்னணி இசையை 4 மியூசிக்ஸ் அமைத்துள்ளது.