
புத்தாண்டு கொண்டாட்டம் : தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த்
புத்தாண்டு முன்னிட்டு விஜயகாந்தை சந்திப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
நீண்ட நாட்களு்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து வருகிறார். விஜயகாந்ததை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.