
பிரபல வில்லன் நடிகரின் மகனுக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்
பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பாபுராஜ் தமிழில் தாயின்மணிக்கொடி , ஜெயா, பரசுராம், ஜனா , ஸ்கெட்ச் , வீரமே வாகை சூடும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பாபுராஜின் மகனின் நிச்சயதார்த்த விழா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பாபுராஜின் மகன் அபய் பாபுராஜின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிளாடிஸ் என்பவர் மணமகள். இந்நிகழ்ச்சியில் பாபுராஜ் கலந்து கொண்டார். நடிகர் தனது மகனுக்கு கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அபய் பாபு ராஜின் முதல் திருமணத்தின் மகன். மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய கூமன் திரைப்படம் பாபுராஜ் நடிப்பில் கடைசியாக வெளியானது.