
நாமக்கலில் பட்டாசு வெடித்து ஒரே குடுமபத்தை சேர்ந்த 4 பேர் பலி
நாமக்கல்லில் பட்டாசு வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் . நாமக்கல் மொகன்னூர் மேட்டுத்தெருவில் தில்லைகுமார் (35), இவரது மனைவி பிரியங்கா (30), தாய் செல்வி (55), பக்கத்து வீட்டு பெரியக்கா (72) ஆகியோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு விற்பனைக்காக சிவகாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டாசு சேகரிப்பு குடோனுக்கு கொண்டு செல்லாமல் வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
பட்டாசுகளுடன், வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர்களும் வெடித்து சிதறின. வீடு முற்றிலும் சேதமடைந்தது. அருகில் இருந்த 5 வீடுகளும் சேதமடைந்தன.