
தேன் நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்
தேன் நெல்லிக்காய் சளி, இருமல், தொண்டை தொற்றுகளுக்கு மிகவும் நல்லது. தேனுடன் நெல்லிக்காய் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகும். மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் இது ஒரு நல்ல வீட்டு வைத்தியம். தேன் கலந்த நெல்லிக்காய் பசியை அதிகரிக்கவும் உதவுகிறது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவது உடலின் நச்சுத்தன்மையை போக்க சிறந்த வழியாகும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் பருமன், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். தேன் நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் பல நன்மைகள் உள்ளன.