
திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக மனைவியை கொன்ற வாலிபர் கைது
திருமணத்திற்கு புறம்பான உறவில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து வாலிபர் கொன்றார். காசியாபாத் மோடிநகரை சேர்ந்த விகாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி சோனியா கொல்லப்பட்டார்.
கூகுளில் ‘ஒருவரை எப்படி கொல்வது’ என தேடிய பின் மனைவியை கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். கூகுளில் தேடுதலில் அவர் கைது செய்யப்பட்டார். விகாஸின் திருமணத்திற்கு புறம்பான உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே கொலையில் முடிந்ததாக ஹாபூர் எஸ்பி தீபக் புகர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியா கடத்தப்பட்டதாக விகாஸ் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் விகாஸ் கூறியதை போலீசார் நம்பவில்லை. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோனியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டனர். இதையடுத்து போலீசார் விகாஸை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அவரது செல்போனை சோதனையிட்டதில் கொலையின் மர்மம் தெரியவந்தது. ஒருவரை எப்படி கொல்வது, துப்பாக்கி எங்கு கிடைக்கும் என்று கூகுளில் தேடியிருந்தார். இதுதவிர பிளிப்கார்ட் மூலமாகவும் விஷம் வாங்க முயன்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.