
திருநெல்வேலி கோவில்களில் தொடர் திருட்டு – மக்கள் பீதி
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியலில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். நடுக்கல்லூர் முத்துமாரியம்மன் கோயில், கருப்பசாமி கோயிலிலும் பணத்தை திருடிச் சென்றனர். இந்நிலையில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.