டெல்லி முதியோர் இல்லத்தில் தீவிபத்து : 2 பேர் பலி

டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். அதிகாலை 5.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் இருந்து 6 பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. விவரங்கள் வெளியிடப்படவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *