டிசம்பர் 31, வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

535 – பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான்.

1225 – வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது.

1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட்  எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின்  முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.

1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *