
ஜின் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் ; வருத்தம் தெரிவிக்கும் இயக்குனர்
ஜின் என்பது 2022 ஆம் ஆண்டு சித்தார்த் பரதன் இயக்கிய ஒரு கற்பனை நாடகத் திரைப்படமாகும், இது ஸ்டிரைட்லைன் சினிமாஸ் பேனரின் கீழ் சுதீர் விகே, மனு மற்றும் மிருதுல் வி நாத் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இப்படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தும் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதில் தவிர்க்க முடியாத சில தொழில்நுட்பக் காரணங்களால் ஜின் வெளியாகவில்லை என்றும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் இயக்குநர் முகநூலில் தெரிவித்துள்ளார்.