
சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது
சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. இந்த படம் U/A சான்றிதழுடன் டிசம்பர் 30, 2022 அன்று வெளியானது. ஓ மை கோஸ்ட் படத்தை ஆர் யுவன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்ய, அன்பிற்கினியல், மாநகரம் போன்ற படங்களில் நடித்த ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். மெட்ரோ புகழ் ரமேஷ் பார்தி படத்தொகுப்பு செய்துள்ளார்.