
‘கன்னிபால் ஹோலோகாஸ்ட்’ இயக்குனர் ருகெரோ டியோடாடோ காலமானார்
Cannibal Holocaust என்ற திகில் திரைப்படத்தின் மூலம் சர்ச்சைக்குரிய பிரபலமாக மாறிய இத்தாலிய இயக்குனர் Ruggero Deodato (83) காலமானார். Deodato 6 தசாப்தகால வாழ்க்கையில் பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார். ஆனால் அவை எதுவும் கன்னிபால் ஹோலோகாஸ்ட் போல விவாதிக்கப்படவில்லை. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த மிக யதார்த்தமான காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்திற்காக விலங்குகளைக் கொன்றதாகக் கூறப்பட்டதற்காக டியோடாடோ கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். 1980 ல் வெளியான இப்படம் தென் அமெரிக்கக் காடுகளில் நடக்கும் மிருக பலியைப் பற்றியது. இப்படத்திற்காக உள்ளூர் நடிகர்களால் உண்மையான மிருக பலி நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அந்த படம் தடை செய்யப்பட்டது.