
ஒடிசாவில் காணாமல்போன ரஷ்ய ஆர்வலர் கண்டுபிடிப்பு
காணாமல் போன ரஷ்ய ஆர்வலர் ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சந்தையில் இருந்து, உக்ரைன் போர் எதிர்ப்பு ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திய ரஷ்ய நாட்டவரான ஆண்ட்ரூ கிளாகோர்வின் (Andruy Glagorvin) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
விசா காலாவதியானதையடுத்து இந்தியாவில் புகலிடம் கோரி ஐ.நா.விடம் விண்ணப்பம் செய்ததாக ரயில்வே காவல்துறையின் பொறுப்பாளர் ஜாதவ் பிஸ்வஜித் தெரிவித்தார். ஒடிசாவில் எம்.பி.யும் தொழிலதிபருமான பாவெல் அன்டோவ் மற்றும் சக பயணி விளாடிமிர் பிடெனோவ் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகு ஆண்ட்ரூ கிளாகோர்வின் போர் எதிர்ப்பு அட்டையை வைத்திருக்கும் புகைப்படம் வைரலானது.
அவர் ரஷ்ய அகதி, போருக்கு எதிரானவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எதிர்த்து, வீடற்றவர்களுக்கு உதவுமாறு கோரிய பலகையை ஏந்தியிருந்தார்.