
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட கைப்பற்ற முடியாது : அமித்ஷா எச்சரிக்கை
சீன எல்லையில் உள்ள இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பெங்களூரு தேவனஹள்ளியில் ITBP யின் புதிதாக கட்டப்பட்ட அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் திறப்பு விழா மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய துப்பறியும் பயிற்சி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டும் விழாவில் அவர் பேசினார்.
எல்லையை பாதுகாப்பதற்கு மட்டுமே பலம் வாய்ந்த இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையை (ஐடிபிபி) தனக்குத் தெரியும். மிகவும் பாதகமான சூழ்நிலையில் ராணுவம் செயல்படுகிறது. மைனஸ் 42 டிகிரியில் 24 மணி நேரமும் நாட்டைக் காக்கிறார்கள். தைரியம் மற்றும் தேசபக்தியால் இது சாத்தியமானது என கூறியுள்ளார்