
நிஜாமுதீன் தர்காவில் ராகுல் காந்தி பிரார்த்தனை
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தேசிய தலைநகரான டெல்லியில் நுழைந்துள்ள நிலையில், அவர், நிஜாமுதீன் தர்காவில் பிரார்த்தனை செய்தார். பயணத்தின் போது ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காவையும் ராகுல் பார்வையிட்டார். டெல்லியில் இந்த பாதயாத்திரையில் நடிகர் கமல்ஹாசன், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் யாத்திரையில் கலந்து கொண்டனர்.
இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய நகர மையங்கள் வழியாக பயணம் தொடர்ந்தது. ராஜ்காட், காந்தியின் சமாதி மற்றும் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களில் ராகுல் மரியாதை செலுத்தினார்.