
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கான முன்பதிவு நாளை தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 2, 2023 அன்று வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்படும். ஜனவரி 11ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.இந்நிலையில், பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு நாளை (22ம் தேதி) முதல் துவங்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.