
செஞ்சி அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது
செஞ்சி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர்களை விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அரவிந்தன் (வயது20), நூர்முகமது (19), மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித் (15), ஆலம்பூண்டியை சேர்ந்த வினோத்குமார் (18) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.