
HOP OXO மின்சார வாகனத்தின் விநியோகம் தொடங்குகிறது
HOP OXO மின்சார இரு சக்கர வாகனம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 10,000 பேர் இந்த வாகனத்தை ரூ.999 செலுத்தி முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஜெய்ப்பூரில் முன்பதிவு செய்த 2,500 பேருக்கு வாகனம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் தெலுங்கானாவிலும் விரைவில் விநியோகம் தொடங்கும்.