52 ஆயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் அவதார்-2

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் ‘அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியாகிறது. இந்தியாவில் சமீபத்தில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *