
20வது திருமண நாளில் கணவர் இந்திரஜித்துடன் துருக்கியில் இருந்த பூர்ணிமா
மலையாள சினிமாவின் பேவரிட் நட்சத்திர ஜோடி பூர்ணிமா மற்றும் இந்திரஜித். நேற்று முன்தினம் அவர்களது 20வது திருமண நாள் மற்றும் பூர்ணிமாவின் 44வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கின்றனர் . இந்த சிறப்பு தினத்தை கொண்டாட இருவரும் துருக்கிக்கு சென்றனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து துருக்கியில் இருந்து படங்களை பகிர்ந்துள்ளார் பூர்ணிமா. தம்பதி இருவரும் டிசம்பர் 13, 2002 அன்று திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.