
வைரலாகும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் புதிய பாடல்
இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் புதிய பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுகுன சுந்தரி என தொடங்கும் இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Start dancing to the MASS ENERGETIC beats 🕺💃#SugunaSundari from #VeeraSimhaReddy out now 💥
NataSimham #NandamuriBalakrishna @megopichand @shrutihaasan @varusarath5 @MusicThaman #RamMiriyala @ramjowrites @Sekharmasteroff @SonyMusicSouth pic.twitter.com/AQnM1Dwseh
— Mythri Movie Makers (@MythriOfficial) December 15, 2022