
வெள்ளி மீது தங்க முலாம் பூசி அடகு வைக்க வந்த 2 பேர் கைது
சேலம் வீராணம் பகுதியில் அப்பன் ராஜ் (47) என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு பெண் உள்பட 2 பேர் வந்தனர். 2 பேரும் 7 கிராம் எடை கொண்ட தங்க நாணயத்தை கொடுத்தனர். கடை உரிமையாளர் நகைகளை வாங்கி உரசி பார்த்தார். அதில் 2 கிராம் அளவுக்கு தங்க முலாம் பூசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னதுரை(43), செல்வி(42) என தெரிய வந்தது. இதையடுத்து இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .